யாழ்ப்பாண பிரதேச செயலாளர் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம்
புதிய இணைப்பு
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சாம்பசிவம் சுதர்சன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து கௌரவ ஆளுநர் இன்று புதன்கிழமை காலை (22.10.2025) வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.
முதலாம் இணைப்பு
பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு யாழ்ப்பாண பிரதேச செயலாளரை வடக்கு மாகாண சபைக்கு இடம்மாற்றியுள்ளது.
இதன்படி வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் சாம்பசிவம் சுதர்சன் இன்றைய தினம் (21.10.2025)யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தமக்கான இடமாற்ற விடுவிப்புக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
வடக்கு மாகாண சபையில் கடமை பொறுப்பேற்பு
இவர் நாளைய தினம் (22.10.2025) வடக்கு மாகாண சபையில் தமது கடமையினை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
