கடற்றொழிலாளர் பிரச்சினைகளை மறந்து ஸ்டாலினுடன் செல்ஃபி மோகம் : தமிழ் எம்.பிகள் மீது சுமத்தப்படும் குற்றம்

M. K. Stalin India Sri Lanka Fisherman
By Raghav Jan 13, 2025 01:46 PM GMT
Report

இலங்கை (Sri Lanka) கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து பேசாமல் முதலமைச்சர் ஸ்டாலினுடன் (M K Stalin) சிரித்துக்கொண்டு வெறுமனே செல்ஃபி எடுத்தமை வருத்தம் அளிப்பதாக யாழ் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் ரட்ணகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள சம்மேளனத்தின் அலுவலகத்தில் இன்றையதினம் (13.01.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா (India) - தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றுக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan ), இ.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam), முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  (M. A. Sumanthiran) ஆகியோர் நேற்றையதினம் (12.01.02025) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

பாடசாலை ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு : தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு

பாடசாலை ஆசிரியர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு : தீவிரமாக பரிசீலிக்கும் கல்வியமைச்சு

கடற்றொழிலாளர்

இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் “இலங்கை கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்ந்தும் தொடர்கதையாகவே உள்ளது.

கடற்றொழிலாளர் பிரச்சினைகளை மறந்து ஸ்டாலினுடன் செல்ஃபி மோகம் : தமிழ் எம்.பிகள் மீது சுமத்தப்படும் குற்றம் | Jaffna District Fishermen S Media Meeting

இலங்கை கடற்றொழிலாளர்களின் வலைகள் மற்றும் தொழில் முதல்கள் இந்திய இழுவைப் படகுகளால் அழிக்தப்படுகின்றன. இது இவ்வாறு இருக்கையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடியில் ஈடுபடும்போது இலங்கை கடற்படை கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கருத்து பிழையானது என்றுகூட அவர்கள் முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டவில்லை.

தண்ணீர் போத்தல் நிறுவனங்களின் ஏமாற்றுவேலை அம்பலம்

தண்ணீர் போத்தல் நிறுவனங்களின் ஏமாற்றுவேலை அம்பலம்

இந்திய முதலமைச்சர் 

கடந்த வருடம் நடுப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் சீறுவாணம் விட்டதுபோல, இந்திய இழுவைமடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முல்லைத்தீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நோக்கி ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடற்றொழிலாளர் பிரச்சினைகளை மறந்து ஸ்டாலினுடன் செல்ஃபி மோகம் : தமிழ் எம்.பிகள் மீது சுமத்தப்படும் குற்றம் | Jaffna District Fishermen S Media Meeting

மக்களுக்காக இந்த போராட்டத்தை செய்கின்றார்கள், இது வரவேற்கத்தக்க விடயம் என்று அப்போது நாங்களும் மகிழ்ச்சியடைந்தோம்.

ஆனால் நேற்று முதலமைச்சருடன் அவர்கள் சிரித்துக்கொண்டு செல்ஃபி எடுத்ததை பார்க்கும்போது, இலங்கை  கடற்றொழிலாளர்கள் விடயம் நினைவில் கூட இல்லை என்பது போலதான் எமக்கு தெரிகிறது. என தெரிவித்துள்ளார்.

வடக்கில் 3 பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில்...! இளங்குமரன் எம்.பி

வடக்கில் 3 பொருளாதார மத்திய நிலையங்கள் விரைவில்...! இளங்குமரன் எம்.பி

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் : அநுரவுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் : அநுரவுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026