ஞானசார தேரரின் நடைபயண பேரணியில் தாக்குதல் விவகாரம்: அம்பலமான உண்மை பின்னணி

Viral Video Galagoda Aththe Gnanasara Thero Social Media
By Pavi Oct 15, 2026 04:35 AM GMT
Report

சிறையில் உள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்படும் பேரணிக்கு ஆதரவளித்த நபர் ஒருவர் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்களை இலங்கை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஒக்டோபர் 14ஆம் திகதி வீரகுல காவல் பிரிவில் இடம்பெற்றதாகவும், இது பேரணியுடன் தொடர்புடைய தாக்குதல் அல்ல என்றும், போக்குவரத்து தொடர்பான தகராறே சம்பவத்திற்குக் காரணம் என்றும் காவல்துறையினர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

பேரணிக்கு உதவிய நபர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாக தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் கூறும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இலங்கையூடாக போலி ஆவணங்களில் பாகிஸ்தான் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தல் - நால்வர் கைது!

இலங்கையூடாக போலி ஆவணங்களில் பாகிஸ்தான் பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தல் - நால்வர் கைது!

சித்தரிக்கப்பட்ட காணொளி

இதன்போது காவல்துறையினர் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்த போது தாக்கப்பட்டதாக கூறப்படும் காயமடைந்த நபர் குறித்த பேரணியுடன் தொடர்புடையவர் அல்ல என தெரிவிக்கபட்டுள்ளது. 

ஞானசார தேரரின் நடைபயண பேரணியில் தாக்குதல் விவகாரம்: அம்பலமான உண்மை பின்னணி | Monk Accused Spreading False Claims About Attack

அவர் தனது தனிப்பட்ட தேவைக்காக லொறியில் பயணித்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

காயமடைந்த நபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின்படி, வீதியவத்த தேவாலயத்திற்கு அருகில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின்போது அவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த வாக்குவாதம் தலைக்கவசத்தைப் பயன்படுத்தி தாக்கும் அளவுக்கு உடல் மோதலாக மாறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தகராறில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணை

காயமடைந்த நபரின் காயங்களைக் காட்டும் காணொளியை ஆனந்தசிறி தேரர் பதிவு செய்துள்ளதாகவும், பேரணிக்கு ஆதரவளித்ததற்காக அவர் தாக்கப்பட்டதாக அந்தக் காணொளியில் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் காவ்லதுறையினர் தெரிவித்துள்ளனர்.

ஞானசார தேரரின் நடைபயண பேரணியில் தாக்குதல் விவகாரம்: அம்பலமான உண்மை பின்னணி | Monk Accused Spreading False Claims About Attack

எனினும், இந்தச் சம்பவத்திற்கும் பேரணிக்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர், சமூக ஊடகங்கள் ஊடாகத் தவறான தகவல்களைப் பரப்பியதாக தேரர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வீரகுல காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய பொய்யான அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில்  பரவும் காணொளிகளையும் தகவல்களையும் பகிர்வதற்கு முன்னர் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மீகமுவையில் தொடருந்தில் மோதுண்டு இத்தாலியப் பிரஜை பலி

மீகமுவையில் தொடருந்தில் மோதுண்டு இத்தாலியப் பிரஜை பலி

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு10,800 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026