மீகமுவையில் தொடருந்தில் மோதுண்டு இத்தாலியப் பிரஜை பலி
Accident
Death
By Pavi
தொடருந்தில் மோதுண்டு வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீகமுவை காவல் நிலையத்திற்குப் முறைப்பாடு கிடைத்துள்ளது.
நேற்று (14.10.2026) காலை, மீகமுவை கட்டுவ ரயில் நிலையத்தில் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதுண்டு குறித்த வெளிநாட்டுப் பிரஜை படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, அவர் மீகமுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் 76 வயதுடைய இத்தாலியப் பிரஜை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மீகமுவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |