கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!
காலியில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமன்கடுவை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காவல்துறை குழுக்கள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த குடும்பஸ்தருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே நீண்ட நாள்களாக இருந்து வந்த பணப் பரிமாற்றம் தொடர்பான ஒரு முறுகல் நிலையே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.
நேற்று (14-10-2026) ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கைகலப்பாக மாறி தாக்குதலில் முடிந்துள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த மற்றுமொரு நபர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி தற்சமயம் தலைமறைவாகியுள்ளனர்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக விசேட காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |