தேசிய மட்டத்தில் யாழ். மாவட்டத்திற்கு 14 விருதுகள்
Sri Lankan Tamils
Jaffna
By Kajinthan
கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டு தோறும் நடத்தும் கலை இலக்கியப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன.
கொழும்பில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விருது வழங்கும் விழாவில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன.
அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேசத்துக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
திறந்த பிரிவு கவிதையாக்கத்தில் முதலாமிடமும், திறந்த பரிவு நாட்டார் கலைகற்றலில் (ஆய்வு)` இரண்டாமிடமும், திறந்த பரிவு பாடலாக்கத்தில் மூன்றாமிடமும், அதி சிரேஷ்ட பிரிவு பாடல் நயத்தல் போட்டியில் முதலாமிடமும், சிறுவர் பிரிவு கையெழுத்துப் போட்டியில் ` இரண்டாமிடமும் கிடைத்துள்ளது.




| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |