யாழில் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்!
யாழில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கைது இடம்பெற்றுள்ளது.
அதிரடிப்படையால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திடீர் சுற்றிவளைப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெல்லியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் கைது இடம்பெற்றுள்ளது.
இதனடிப்படையில் செம்பியன் பற்று வடக்கு பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விசேட அதிரடிப்படையால் திடீர் சுற்றிவளைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்து முச்சக்கர வண்டியை சோதனை செய்தபோது அதிலிருந்து 2Kg கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த 19 வயது இளைஞன் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபரும் கேரளா கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |