யாழில் இடம்பெறவுள்ள பரீட்சார்த்த முயற்சி -இணையவழியில் “வண்டியும் தொந்தியும் ” நகைச்சுவை நாடகம்
Tamil Cinema
Jaffna
By Vasanth
நாடக உலகில் முதன் முறையாக இணைய வழியாக நாடகத்தை நடத்தும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் செயல்திறன் அரங்க இயக்கம் நடாத்த உள்ளது.
அந்த வகையில் “வண்டியும் தொந்தியும் ” என்ற நாடகம் சூம் செயலிவழி ஊடாக அரங்கேற்றப்பட உள்ளது. நகைச்சுவை பாங்கான இந்த நாடகத்தை நாளை செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு சூம் செயலி ஊடாக ( Zoom ID: 857 1051 6422 , Passcode: 2021 ) பார்வையிட முடியும்.
செயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில் , ரி. றொபேர்ட்டின் இசையில், த. பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் ஆகியோர் இதில் நடித்துள்ளார்கள்.


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி