இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீனவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த இந்திய மீனவர்கள்!

india sri lanka jaffna fisherman kurunagar
By Kalaimathy Oct 05, 2021 08:01 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை மீன்பிடி படகு குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு படகில் இருந்த குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று இரவு 12 மணியளவில் தொழிலுக்குச் சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இலங்கை காக்கைதீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர்,  இலங்கை மீன்பிடி படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்தியுள்ளது.

அத்துடன் படகில் இருந்தவர்களை தாக்கி மூவரையும் கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை சேர்ந்துள்ளார்கள்.   

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கையில், 

எமது கடலில் சுதந்திரமாகச் சென்று மீன் பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக அத்துமீறிய இந்திய மீனவர்கள் எமது படகினை சேதப்படுத்தியதோடு மாத்திரமல்லாது படகில் இருந்த மீனவர்களின் உயிரைக் காப்பாற்றாது கடலுக்குள் தள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்த போதிலும் மீனவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் குருநகர் மீனவ சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதேவேளை இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர்யூலியன் சகாயராஜா தெரிவித்துள்ளார்.இந்திய இழுவைப்படகுகளால் குருநகர் பகுதி மீனவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்திய இழுவை படகுகளின் பிரச்சினை தொடர்பில் ஏற்கனவே கடற்தொழில் அமைச்சு மட்டத்தில் முறையிட்டுள்ளோம். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய வருகை நிறுத்தப்பட வேண்டும். இந்த பிரச்சனை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.   இந்திய மீனவர்களால் எமது மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் நீண்ட நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இன்றைய சம்பவமானது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.   இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் படகு உரிமையாளர்களுக்கும் இந்திய அரசினால் நஷ்ட ஈடு வழங்குவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.  ஏனென்றால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவது ஒருபுறம் அதேபோல மீனவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது இன்னொருபுறமாக இருக்கின்றது.

இந்த நிலையில் எமது மீனவர்கள் கடலில் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது எனவே இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்பிற்குள் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்திருக்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் இருக்கவேண்டும் எமது மீனவர்கள் பாதுகாப்பான முறையில் தொழில் செய்து கரை திரும்ப வேண்டும்.

வாழ்வாதாரத்திற்காகவே எமது மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்கின்றார்கள். இவ்வாறான அடாவடித்தனமான செயற்பாட்டினை இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து செய்வதால் எமது மீனவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.   அத்தோடு நடுக்கடலில் மீனவர்களை தாக்குவதோடு அவர்களின் உயிர்களை காப்பாற்றாது கடலில் தத்தளிக்கிற நிலை காணப்படுகின்றது.   

இது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும் இயற்கை அனர்த்தம் உள்ள நிலைமையில் தாக்கி சேதமாக்கப்பட்ட படகினை ஓட முடியாத நிலை காணப்பட்டிருந்தால் அந்த 3 மீனவர்களும் உயிரிழக்க கூடிய நிலையும் ஏற்பட்டிருக்கும் எனவே இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டினை நிறுத்துவதற்குரிய நடவடிக்கையினை கடற்தொழில் அமைச்சும் அரசாங்கமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, Scarborough, Canada

02 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, இலங்கை, London, United Kingdom, Scarborough, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, சவுதி அரேபியா, Saudi Arabia, சுவீடன், Sweden, London, United Kingdom, Brampton, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024