யாழில் விபத்துக்குள்ளான படகு: மாயமான கடற்தொழிலாளர்
Jaffna
Accident
By Shadhu Shanker
யாழ்ப்பாணம் (Jaffna) - மாதகல் கடற்பகுதியில் கடற்தொழிலாளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில், படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதிலேயே இவர் காணாமல் போயுள்ளார்.
இளைஞர் ஒருவர் மாயம்
இரு இளைஞர்களுடன் கடற்றொழிலுக்குச் சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்போது, ஒருவர் பாதுகாப்பாகக் கரை சேர்ந்துள்ள நிலையில், மற்றைய இளைஞர் காணாமல் போயுள்ளார்.
அவரை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினரும், கடற்றொழிலுக்கு இணைந்து ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி