யாழில் வைத்தியசாலை உணவு தயாரிப்பு இடத்திலும் வெடித்தது எரிவாயு அடுப்பு!
hospital
police
jaffna
investigation
point pedro
gas
exploded
By Kalaimathy
பருத்தித்துறை வைத்தியசாலையில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உணவு தயாரிப்பு இடத்திலேயே இன்று எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
இன்று காலை 6.45 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்