யாழில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கூறிய விடயம்

Jaffna Douglas Devananda Hariharan
By Dilakshan Feb 11, 2024 12:27 AM GMT
Report

தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் தலைமையில் இசைக் கலைஞர்கள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சியில் உருவான குழப்ப நிலைகள், சம்பவங்கள் வருத்தமளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.முற்றவெளியில் நேற்று(09.02.2024) இடம்பெற்ற தென்னிந்திய திரை பிரலங்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், "இவ்வாறான சம்பவங்கள் எமது பிரதேசங்களில் இடம்பெறுவது வேதனையளிக்கின்றது.

"நன்றி யாழ்ப்பாணம்" ஹரிஹரனின் பதிவு

"நன்றி யாழ்ப்பாணம்" ஹரிஹரனின் பதிவு


எதிர்பார்ப்பு

எமது மக்களின் வாழ்வாதாரத்தினையும் வாழ்வியலையும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்கு எமது புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம்.

யாழில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கூறிய விடயம் | Jaffna Hariharan Concert Douglas Devananda Saying

இந்நிலையில் புலம்பெயர் முதலீட்டாளர் ஒருவரின் முன்முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுவது, மக்கள் நலன் சார்ந்த எமது எதிர்பார்ப்புக்களுக்கு பின்னடைவுகளையே ஏற்படுத்தும்.

எமது மக்களை தொடர்ந்தும் அவலங்களுக்குள் அமுழ்த்தி வைத்திருந்து, அதன்மூலம் அரசியல் இலாபமீட்ட முனைகின்ற சுயலாப தரப்புக்கள், எமது பிரதேசங்களில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் இல்லை என்ற கருத்தினை பரப்புவதில் கண்ணும் கருத்துமாக செயற்பபட்டு வருகின்றனர்.

ஏமாற்றம்

அவ்வாறானவர்களின் கருத்துக்களை வலுப்படுத்துவதாக இவ்வாறான சம்பவங்கள் அமைந்து விடும்.

கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பார்க்கின்றபோது, ஏற்பாட்டாளர்களின் எதிர்பார்ப்பிற்கும் அதிகமான மக்கள் வருகை தந்தமையும், ஒழுங்குபடுத்தலில் இருந்த குறைபாடுகள் சிலவுமே இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

யாழில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கூறிய விடயம் | Jaffna Hariharan Concert Douglas Devananda Saying

இந்த சம்பவமானது, இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த எமது மக்களுக்கும், ஆர்வத்துடன் வருகைதந்த தென்னிந்திய கலைஞர்களுக்கும் அதேபோல் ஏற்பாட்டாளர்களுக்கும் ஏமாற்றத்தினை அளித்திருக்கின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது வருத்தத்தினை தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றபோது, தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி செய்வதை ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்." என்று தெரிவித்துள்ளார். 

குழப்பத்தில் முடிந்த யாழ் இசை நிகழ்ச்சி : கருத்து வெளியிட்ட அங்கஜன்!

குழப்பத்தில் முடிந்த யாழ் இசை நிகழ்ச்சி : கருத்து வெளியிட்ட அங்கஜன்!

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024