யாழ். போதனா ஊழியர்கள் ஆறாவது நாளாகவும் போராட்டம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று ஆறாவது நாளாகவும் இடம்பெற்றுள்ளது.
இன்றைய போராட்டத்தில் இரு அணிகளாக பிரிந்த சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும், கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் வெற்றிடத்திற்கான நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு 92 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது.
கொழும்பு சென்ற பணிப்பாளர்
இந்நிலையில் ஐந்து வருடங்களாக பணியாற்றம் தமக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே ஏனையோருக்கு வழங்கப்பட வேண்டும் என கூறியே இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
[J2K05L
இதன்படி, இது குறித்து பேசுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்றையதினம் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 5 மணி நேரம் முன்