தாய்லாந்தில் முடிவிற்கு வந்த இலங்கையரின் கனடிய சாகசம்
போலியான கனடிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி விமானத்தில் ஏற முயன்றதாகக் கூறப்படும் இலங்கையர்(வயது20) ஒருவர் கடந்த வாரம் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
லண்டன் செல்லும் விமானத்தில் ஏற முயன்றபோது, பயணி ஒருவர் சமர்ப்பித்த கனடிய பயண ஆவணத்தில் முறைகேடுகளைக் கண்டறிந்ததை அடுத்து, பாங்கொக்கிற்கு அருகிலுள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பிடிபடாமல் தப்பிப்பதற்காகப் பல பயண வழி
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், அந்த நபர் ஒரு இலங்கையர் என்பதும், பிடிபடாமல் தப்பிப்பதற்காகப் பல பயண வழிகளைப் பயன்படுத்தும் திட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, தாய்லாந்து அதிகாரிகள் பின்னர் டான் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது சந்தேக நபரைக் கைது செய்தனர்.
எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் எவ்வாறு நடந்துகொள்வது என்பது குறித்த வழிமுறைகளைக் கொண்ட தகவல்கள் ஒரு கைபேசியிலிருந்து மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
தாய்லாந்தின் குடிவரவு மற்றும் ஆவண மோசடிச் சட்டங்களின் கீழ் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 7 மணி நேரம் முன்