யாழ்போதனா மருத்துவமனை மற்றுமொரு சாதனை
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றுமொரு சாதனையை படைத்துள்ளது. மீனவரின் துண்டாடப்பட்ட கையை பொருத்தியே யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவ நிபுணர்கள் மீண்டுமொரு சாதனையை படைத்துள்ளனர்.
சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பருத்தித்துறையில் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மன்னாரைச் சேர்ந்த மீனவர் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை தவறுதலாக கடலில் விழுந்த நிலையில் அவரது வலது கையும் வலது காலும் வள்ளத்தின் காற்றாடியில் சிக்குண்டு சிதைந்தன.
இந் நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், வைத்தியர்களால் கை மீளப் பொருத்தப்பட்டது. சுமார் 5 மணித்தியாலங்கள் இந்தச் சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சகிச்சை நிபுணர் வைத்தியர் இளம்செழிய பல்லவன் உள்ளிட்ட வைத்தியர்களால் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.