யாழில் வீடமைப்பு திட்டத்தில் குளறுபடி - பிரதேச செயலாளர்களுக்கு அவசர அறிவுறுத்தல்
கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான வீடமைப்பு திட்டம் தொடர்பில் யாழ். மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர்களிற்கும் மிகவும் முக்கியமானதும் அவசரமானதுமான அறிவுறுத்தலை விடுத்துள்ளார் யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன்.
மேற்படி விடயம் தொடர்பாக கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மானத்தறை மற்றும் கட்டிடப்பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜங்க அமைச்சின் நிதியுதவியின் கீழ் இவ்வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 01 மில்லியன் (ரூபா1,000,000.00) மற்றும் 0.6 மில்லியன் (ரூபா 600,000.00) பெறுமதியான வீடமைப்பு திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கிடைத்திருந்தது.
இவ்விடயம் தொடர்பில் மேற்படி அமைச்சின் SMRHC/RD/04/01 இலக்க 2021.03.05 அறிவுறுத்தல் கடிதம் பிராகாரம் எனது சம இலக்க 2021.04.17, 2021.04.29 மற்றும் 2021.05.11 கடிதங்கள் மூலம் பயனாளிகன் எண்ணிக்கையும் மற்றும் பயனாளிகளினை தெரிவு செய்யும் முறையும் அறியத்தரப்பட்டது.
இதன் பிரகாரம் பயனாளிகள் தெரிவு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் இணைத்தலைவர்கள், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் எனக்கும் தொடர்ச்சியாக பயனாளிகள் தெரிவு தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளன.
எனவே இந்நிலையினை சீர்செய்யுமாறு க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அறிவறுத்தல்கள் இணைக்கப்பட்டுள்ளது,