யாழில் சட்டவிரோத மதுபான உற்பத்தி : ஒருவர் கைது : உபகரணங்களும் பறிமுதல்
Sri Lanka Police
Jaffna
Arrest
By Theepan
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபானம், அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றுடன் நேற்று (18) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு சட்டவிரோத மதுபானத்தை உற்பத்தி செய்துகொண்டிருந்தவரை கைது செய்துள்ளனர்.
ஒரு லீட்டர் 800 மில்லி லீட்டர்
அத்துடன் அங்கிருந்து ஒரு லீட்டர் 800மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானம், அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்திய உபகரணங்கள் என்பவற்றையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்