யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் சபையில் சாணக்கியன் கேள்வி
துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் விமான நிலையம் உள்வாங்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அரசாங்கம் சர்வதேச விமான நிலையமாக ஏற்றுக்கொள்ளவில்லையா எனவும் இதனபோது கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் இன்று துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழான கட்டளைகள், உற்பத்தி வரி சட்டத்தின் கீழான கட்டளைகள், நிதிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் மற்றும் புலமைச்சொத்து திருத்த சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டு சட்டத்தின் கீழ் மத்தள விமானநிலையம் மற்றும் கொழும்பு விமான நிலையம் உள்வாங்கப்பட்டுள்ளது.
ஏன் யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் இதில் உள்ளடங்கவில்லை என்பதை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன், யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் அரசாங்கம் சர்வதேச விமான நிலையமாக கருதவில்லையா? இதற்கு அரசாங்கம் பதில் கூற வேண்டும் என்றார்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 3 நாட்கள் முன்
