யாழில் நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சடலம்! வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Jaffna Sri Lanka Police Investigation
By Vanan Aug 13, 2023 04:19 PM GMT
Report

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் நேற்று(12) நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். விஷேட குற்றதடுப்பு பொறுப்பதிகாரி  காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான காவல்துறை குழுவினரால் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நடந்தது என்ன?

யாழில் நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சடலம்! வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Jaffna Kalviyankadu Murder Update

சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி(9வயது) ஒருவரை பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வரும் நிலையில் குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி தனது தாயாருக்கு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த தகவலை தாயார் சித்தங்கேணியில் உள்ள சிறுமியின் மாமனுக்கு தெரிவித்திருந்த நிலையில், அவர் கோப்பாய் வந்து குறித்த நபரை சிந்தங்கேணி அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரித்த போது அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின் அந்த நபரை கோப்பாய் கொண்டுவந்து அவரது இல்லத்தில் விட்டுள்ளனர். அவ்வாறு வீட்டில் விடப்பட்ட நிலையில் அவர் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சடலம்! வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Jaffna Kalviyankadu Murder Update

ஆரம்ப கட்ட விசாரணை

உயிரிந்த நபரின் உடலில் அடிகாயங்கள் காணப்பட்ட பொழுதும் உயிர் பிரியக் கூடிய வகையில் காயங்கள் பாரதூரமானதாக இல்லை எனவும் குறித்த நபர் ஏற்கனவே இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழில் நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சடலம்! வெளிவரும் அதிர்ச்சி பின்னணி | Jaffna Kalviyankadu Murder Update

சம்பந்தப்பட்ட சிறுமி நாளையதினம் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று இரவு நீதிபதியின் வாஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025