யாழில் சீல் வைக்கப்பட்ட தொடருந்து நிலையம்: வெளியான காரணம்
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dhilak
யாழ்ப்பாணம் - கொக்குவில் தொடருந்து நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
கொக்குவில் தொடருந்து நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக காவல் நிலையம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளதுடன் நிலைய பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தொடருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்திற்கு செல்லவும் என்று அறிவிப்பொன்றும் கொக்குவில் தொடருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


மரண அறிவித்தல்