பௌத்த கொடியை பிடுங்கி எறிவோம்! முடிந்தால் சுட்டுத் தள்ளுங்கள்..! யாழில் வெடித்த சர்ச்சை (காணொளி)
Sri Lanka Army
Jaffna
Gajendrakumar Ponnambalam
By Vanan
யாழ்ப்பாணம் - கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்ட சிறிலங்கா படையினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் இந்தப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மாவீரர் மாதம் ஆரம்பித்துள்ள நிலையில், கோப்பாயில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக இன்றையதினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், அங்கிருக்கும் படையினரோ தாம் அந்த வீதியை சிரமதானம் செய்து பௌத்த கொடியை நாட்டுவதற்கு முற்பட்டனர்.
இதன்போதே குழப்ப நிலை தோன்றியுள்ளது.
இதனால் குறித்த பகுதியில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்