நோர்வேயில் இருந்து வந்தவரால் சரமாரியாக தாக்கப்பட்ட யாழ் கூலித்தொழிலாளி
நோர்வேயில் (Norway) இருந்து வந்த நபரொருவரினால் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (04) வல்வெட்டித்துறை காவல் பிரிவிற்குட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பெண் பிள்ளையை கிண்டல் செய்ததாக பொய்யான அவதூறு சுமத்தி கூலித்தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மதுபோதை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கூலித் தொழிலாளி தாக்குதல்தாரியின் வீட்டுக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபோதையில் இருந்த கூலித்தொழிலாளிக்கும் மற்றும் நோர்வேயில் இருந்து வந்தவருக்கும் இடையில் முரண்பாடொன்று ஏற்பட்டுள்ளது.
கூலித்தொழிலாளி
இதற்கு பழிவாங்குவதற்காக பெண்ணை கிண்டல் செய்ததாக பொய்யான அவதூறை சுமத்தி கூலித்தொழிலாளி மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சாதியப் பிரச்சினையே இதற்கு அடிப்படை காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனுடன், பயங்கரமான கத்தி முனையிலும் கூலித்தொழிலாளிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிராக நடவடிக்கை
தாக்குதலை மேற்கொண்ட நபர் கத்தியை வைப்பதற்கு மோட்டார் சைக்கிளில் ஒரு விசேட ஏற்பாடு செய்து அந்த கத்தியை கொண்டு திரிந்து அச்சுறுத்தல் விடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வல்வெட்டித்துறை காவல்துறையினருக்கும் மற்றும் தாக்குதலை மேற்கொண்ட நபருக்கும் இடையில் தொடர்புகள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதனால் அவர் என்ன செய்தாலும் வல்வெட்டித்துறை காவல்துறையினர் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
