வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
Vavuniya
Sri Lanka
Teachers
By Shalini Balachandran
வவுனியாவில் (Vavuniya) இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (05) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்பாட்ட பேரணி
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பகுதியில் ஆரம்பமான ஆர்ப்பாட்டமானது மணிக்கூட்டு கோபுர சந்தி வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுபோதினி அறிக்கையின் நிலுவை சம்பளத்தை வழங்கு, தரமான கல்விக்கு வளங்களை சரியாக பகிர்ந்தளி, கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து, பயங்கவராத தடைச்சட்டத்தை ஒழி மற்றும் அதிபர், ஆசிரியர்களை வீதியில் நிறுத்தாதே போன்ற கோசங்களை முன்வைத்து பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி