யாழில் விடுதி ஒன்றை திடீரென சுற்றிவளைத்த பொலிஸார்! இரு பெண்கள் உட்பட நால்வர் சிக்கினர்
#Jaffna #Police #Arrest #Kopay
By Vasanth
கோப்பாய் - கொக்குவில் பகுதியில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதியாக இயங்கும் வீடொன்றில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதியில் சட்டவிரோத செயற்பாடு இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ்.மாவட்ட சிறப்பு பொலிஸ் பிரிவினர், குறித்த வீட்டை இன்று சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரும், ஆண் ஒருவரும் விடுதி உரிமையாளர் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, விசாரணைகளின் பின்னர் நாளை யாழ்.மேலதிக நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி