யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Jaffna
                
                                                
                    Drugs
                
                        
        
            
                
                By Raghav
            
            
                
                
            
        
    யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (07.11.2024) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
யாழ் - கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே 120 மில்லி கிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டாரவின் (Luzon Surya Bandara) கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            2ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்
        
        
 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        