மாநகரசபையின் பொறுப்பில் யாழ்ப்பாணம் கலாசார மையம்...! தீர்மானம் நிறைவேற்றம்
யாழ்ப்பாணம் கலாசார மையத்தினை யாழ்ப்பாணம் மாநகரசபையின் பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையினை விரைந்து செய்ய வேண்டும் என யாழ். மாநகர சபையில் ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் (11-06-2026) முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கலாசார மத்திய நிலையத்தின் பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒன்பதாம் திகதி
குறித்த தீர்மானத்தில் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் திகதி கைச்சாத்திடப்பட்ட இருதரப்பு உடன்படிக்கைக்கு அமைவாகப் பூர்த்தி செய்யப்பட்ட இந்தக் கட்டிடத்தை யாழ்ப்பாணம் மாநகரசபையிடம் விரைவாகக் கையளிக்க வேண்டும் எனவும் இதன் பொருட்டு எந்தவித நம்பிக்கைப் பொறுப்புக் கட்டமைப்பும் (TRUST) உருவாக்கப்படுவதற்கு இந்தச் சபை உடன்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கைக்கான இந்திய உயர் ஆணையரையும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சரையும் கோருவதென யாழ் மாநகரசபை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |