யாழில் இடம்பெற்ற சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
Jaffna
University of Jaffna
SL Protest
By Shadhu Shanker
இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்புக்களை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (25) நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீடத்தில் இருந்து ஆரம்பித்த போராட்டம் பலாலி வீதி ஊடாக பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில், “இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பில் அசமந்தமான போக்கினை உடன் நிறுத்தி, தரமான சேவையை மக்களுக்கு வழங்க, இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கு” என கோசமிட்டபடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி