யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சு வாகனத்தில் இடம்பெற்ற அநாகரிக சம்பவம் : தலைதெறிக்க ஓட்டம்பிடித்த சாரதி
சுகாதார அமைச்சு என அடையாளப்படுத்தப்பட்ட அம்புலன்ஸ் என பெயர் பொறிக்கப்பட்ட வாகனத்தில் மது அருந்திய சாரதியும் உதவியாளரும் வசமாக சிக்கிய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று நண்பகல் 12.30 மணிக்கு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த வாகனம்
அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த குறித்த வாகனத்தின் சாரதியும் அவரது உதவியாளருமே இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.
சுகாதார அமைச்சுக்கு சொந்தமான, அவசர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் குறித்த வாகனத்தில் வைத்து, வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளருமே இணைந்து மதுபானம் அருந்தியுள்ளனர்.
இதனை அவதானித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணொளி பதிவு செய்துள்ளதுடன், இதுதொடர்பில் குறித்த வாகன சாரதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைதெறிக்க ஓட்டம்
ஆனால் இது நோயாளர் காவு வண்டி அல்ல என்றும், இதனை நீங்கள் ஏன் கேட்கின்றீர்கள் என்றும் காணொளி பதிவு செய்தவரிடம் கூறிவிட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு அவர் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார்.
நோயாளருக்கு சேவை வழங்கும் இவர்கள் சுகாதார அமைச்சு இலச்சினை பொறிக்கப்பட்ட வாகனத்தில் ஒரு பொது இடத்தில் இவ்வாறு அநாகரிகமாக நடந்தமை பொதுமக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
