சர்வதேசமே நீதியைத்தா... யாழில் போராட்டம்- களத்தில் புலனாய்வாளர்கள்!
jaffna
protest
northern province
missing persons
By Kalaimathy
யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று காலை 9.30 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
வலிந்து காணாமல்போனோருக்கு மரணச் சான்றிதழ் வேண்டாம், இழப்பீடு வேண்டாம், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் வேண்டாம், சர்வதேசமே நீதியைத்தா போன்ற பல்வேறு கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டன.
ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி வலிந்து காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது . போராட்டம் நடைபெற்ற பகுதியில் காவல்துறையினரும் புலனாய்வுப்பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்