நீர்வேலியில் இரவு இடம்பெற்ற கோரவிபத்து -பரிதாபகரமாக பலியான இளைஞன்
நீர்வேலி பகுதியில் இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாகரமாக உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி பகுதியை சேர்ந்த டிலக்சன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கு அருகில் உள்ள ஞான வைரவர் ஆலயம் முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்திலேயே இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் பெண்கள் பயணிக்கும் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவேளை மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த சிமெந்து கட்டுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. அதன் போது , கட்டில் காணப்பட்ட இரும்புக்கம்பி இளைஞனின் நெஞ்சு பகுதியில் குத்தியுள்ளது. அதனால் படுகாயமடைந்த இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு , வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.