முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திட்டமிட்டபடி நடந்தேறும்- அறைகூவல் விடுத்துள்ள வேலன் சுவாமிகள்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடக்கு-கிழக்கு கட்டமைப்பு, ஏற்பாடு செய்திருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி திட்டமிட்டபடி நடைபெற இருக்கின்றது என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இன்று யாழ் உடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் நடைபெற்றுக் கொண்டு இருக்கக்கூடிய இந்த நூற்றாண்டின் இன அழிப்பு இனப்படுகொலை 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் நடந்தேறி இருக்கின்றது. இன அழிப்புக்கு எதிராகவும் அநீதிக்கு எதிராகவும் நீதி கேட்டு ஈழத் தமிழினம் போராடி வருகின்றது.
இந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும். இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்கின்ற பிரதான வேண்டுகோளை முன்வைத்து அனைத்து தரப்பினரும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த வேளையிலே கொடூரமான மிலேச்சத்தனமான இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட எங்களுடைய உறவுகள் அவர்களுடைய ஆத்மா சாந்திக்காகவும் அந்த உறவுகளை இழந்து தவிக்கின்ற அனைத்து எங்களது உறவுகளுக்கும் அவர்களுடைய மன ஆறுதலுக்காவும் வருடாவருடம் மே மதம் இறந்தவர்களை நினைவு கூருகின்ற ஒரு அடிப்படை உரிமை இருக்கின்றது.
இந்த வருடமும் 12 ஆவது ஆண்டாக அந்த நினைவு தின நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. கொடிய கொரோனா அச்ச காலப்பகுதியிலேயே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காரணத்தினாலே சுகாதார நடைமுறைகளை பேணி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இடம்பெற்றிருந்தாலும் உங்களுடைய அனைத்து உறவுகளையும் நினைத்து உங்களது வீட்டிலேயே இருந்து நீங்கள் நினைவேந்தலில் பங்குபற்ற வேண்டும். முடியும் என்றால், இறுதி யுத்தத்தின் போது எங்களுடைய இனத்தின் ஒரே ஒரு உணவாக இருந்திருக்கக்கூடிய உப்பில்லா கஞ்சியை, காலை நேர உணவை தவிர்த்து மதியத்தில் எங்களுடைய வீடுகளுக்குள்ளேயே செய்து சிறுவர்கள் இளைஞர்களுக்கு பரிமாற வேண்டும்.
எங்களுடைய இனத்தினுடைய வேதனையையும் வடுக்களையும் நடந்த சம்பவங்களுக்காகவும் நாங்கள் போராட வேண்டிய ஒரு கட்டத்தில் இருப்பதையும் இளம் தலைமுறையினருக்கு எதிர்கால தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடைப்பாடு எமக்கு இருக்கின்றது . முள்ளிவாய்க்கால் கஞ்சியினை உலகமெங்கும் வாழ்கின்ற அனைத்து உறவுகளும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று அன்பாக கேட்பதோடு மாலை 6 மணிக்கு ஆலயங்கள் தேவாலயங்கள் என்று அனைத்து இடங்களிலும் மணி ஓசை எழுப்பி அகவணக்கம் செலுத்துங்கள்.
உள்ளங்களது வீட்டு முற்றம் , மதில்களில் பொது இடங்களில் சனசமூக நிலையங்களில் தீபங்களை ஏற்றி இழந்த உறவுகளை நினைவு கூருகின்ற அந்த நிகழ்வை அனைவரும் ஒன்று சேர்ந்து உரிமைக்காக செய்ய வேண்டுமென்று சமயத் தலைவர்கள் ஆகிய நாங்கள் அனைத்து உறவுகளையும் அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.
இது ஆத்மார்த்தமாக நாங்கள் செய்யப்படவேண்டிய ஒரு நிகழ்வு அந்த விதத்தில் இது ஆத்மார்த்தமாக நாங்கள் செய்யப்படவேண்டும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மே 18ஆம் திகதி எமது இனத்துக்காக நாங்கள் அனைவரும் இதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மைத்திரியை நோக்கி வீசப்பட்ட குற்றப்பார்சல்! திரும்பும் சட்டத்தின் கூர்முனை
வரலாற்றை மாற்றிய மரண தண்டனை: மகிழ்ச்சியின் உச்சத்தில் மைத்திரி - பாதுகாப்புச் செயலாளரின் வாக்குமூலம்