சுதந்திர கட்சி வேட்பாளரின் பல இலட்சங்கள் பெறுமதியான உடைமைக்கு தீ வைப்பு!
Jaffna
Srilanka Freedom Party
Fire
Local government Election
By Kalaimathy
கடற்றொழிலாளர் ஒருவரின் வாடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளரின் வாடியே விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்ட வாடி நெடுந்தீவை சேர்ந்த பாக்கியநாதர் எயுசேவியர் என்பவரினுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல இலட்சங்கள் பெறுமதி

வாடி தீக்கிரையாக்கப்பட்ட போது, வாடியினுள் இருந்த கடற்றொழில் உபகரணங்கள் உள்ளிட்ட சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீக்கிரையாக்கப்பட்ட வாடியின் உரிமையாளர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் நெடுந்தீவு 2ஆம் வட்டாரத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


5ம் ஆண்டு நினைவஞ்சலி