நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவையில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு - குறிகட்டுவானிற்கு இடையிலான படகு சேவையில் இன்று இடம்பெறவிருந்த பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவிலிருந்து இன்று காலை 100 ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுதடைந்துள்ளது.
படகின் சுக்கான் நடு கடலில் உடைந்தமையினால் பயணிகள் அச்சமடைந்திருந்தனர். இந்நிலையில் திருத்த பணிகளுக்காக யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த வடதாரகைப் படகின் உதவியுடன் குறித்த படகு குறிகட்டுவான் நோக்கி இழுத்து செல்லப்பட்டது.
இடைநடுவில் பயணிகளை வடதாரகைப்படகிற்கு மாற்ற முடியாத நிலையிலும் பல இடையூறுகளுக்கு மத்தியிலும் குறித்த படகிலிருந்த மக்கள் பாதுகாப்பான முறையில் கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காலை 07.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்ட மக்கள் காலை 10.00 மணியினை அண்மித்தே குறிகட்டுவான் இறங்கு துறைமுகம் சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
