யாழ்.மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் வெளியிட்ட அறிவிப்பு
Jaffna
Litro Gas
Litro Gas Price
By Sumithiran
யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எரிவாயு விநியோகத்தினை சரியான முறையில் கிடைக்கச் செய்வதற்கான முழுமையான ஒத்துழைப்பும் தங்களால் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குடும்ப அட்டைக்கு எரிவாயு விநியோகம் செய்வதில் யாழ்.மாவட்ட லிட்ரோ விநியோகஸ்தருக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தர், எரிவாயு விநியோகத்திற்கு ஒத்துழைக்கவில்லை எனவும் இராணுவத்தின் உதவியுடன் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையிலேயே குறித்த விநியோகஸ்தர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 21 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி