பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் அதிகரிக்கும் தொற்றாளர்கள்!
corona
jaffna
point pedro
By Kalaimathy
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 14 பேருக்கு தொற்று உள்ளமை இன்றைய பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் 23 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 7 வர்த்தகர்களுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.
மேலும் 40 பேரிடம் இன்று முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் வங்கி முகாமையாளர், வங்கி ஊழியர் ஒருவர், நகர சபை ஊழியர்கள் இருவர் மற்றும் பொதுமக்கள் மூவர் அடங்குகின்றனர்.
பருத்தித்துறை நகர் நேற்றிரவு முதல் முடக்கப்பட்டு வங்கிகள் மட்டும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி