தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் ஏனைய கைதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலைப் புலிகள் என ஏனைய கைதிகள் நோக்குவதால் அங்கு அசாதாரண நிலை உருவாகியுள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். ஊடக அமையத்தில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் வெசாக் பண்டிகைக்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.