கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு
#Tamil National Alliance #Jaffna #Gajendrakumar Ponnambalam
By Vasanth
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஐசிங்கத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர்மாலை அணிவித்தார்.
தொடர்ந்து கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் பொது மக்கள் என நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.


மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி