யாழ்.ஐந்து சந்திப்பகுதியில் தனிமைப்படுத்தல்!
corona
quarentine
jafna
By Kalaimathy
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத் தடை நடைமுறையில் உள்ள சந்தர்ப்பத்தில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் குறித்த பகுதியின் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.
தற்போது நாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது, வீதியில் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் உள்ள பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் யாழ்ப்பாண பொலிசார் மற்றும் பொது சுகாதார பரிசோதகரின் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்