யாழ்ப்பாணத்திலும் மோசமான நிலை! அடையாளப்படுத்தப்பட்ட சில இடங்கள் - சுமந்திரன் அழைப்பு

srilanka jaffna m-a-sumanthiran
By Vasanth Feb 01, 2021 07:05 AM GMT
Report

புதிய அரசியலமைப்பில் தமிழ் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதனால் எந்தவிதப் பிரயோசனமும் இருக்காது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னரான ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற அழுத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.

அவற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பேசியிருக்கின்றோம். குறிப்பாக நில அபகரிப்பு வேறு வேறு போர்வைகளின் கீழ் நடைபெறுகிறன.

தொல்லியல் திணைக்களம் மிக மோசமாக கிழக்கு மாகாணம், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளிலும் செயற்படுகின்றது. மகாவலி சட்டம், வனஇலாகா என பல்வேறு சட்டங்களை பயன்படுத்தி எமது மக்களின் நிலங்களை அபகரிக்கின்றது.

தொல்லியல் திணைக்களம் மக்களின் வழிபாட்டு தலங்களை மாற்றி அமைக்கும் மோசமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. வவுனியா வெடுக்குநாறி மலை, குருந்தூர் மலை போன்றவற்றில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தயாராகி வருகின்றோம். மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரில் எழுத்தணை மனு தாக்கல் செய்துள்ளோம். யாழ்ப்பாணத்திலும் மோசமான நில அபகரிப்பு இடம்பெறுகிறது. தொல்லியல் திணைக்களம் சில இடங்களை அடையாளப்படுத்தி ஏற்கனவே ஆராச்சி என வேலைகளை தொடங்கியுள்ளது.

இதை தடுப்பதற்காக தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் தமிழ் தேசியக் கட்சிகள் கூடி ஆராய்ந்துள்ளனர்.

வட- கிழக்கு சிவில் அமைப்புக்கள் இந்த விடயங்களையும், அரசியல் கைதிகளின் விடயம், காணாமல் ஆக்கப்பட்டோருடைய விடயம், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் ஜனசா எரிப்பு விவகாரம், மலையக தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் பிரச்சினை என பல்வேறு விடயங்களை உள்ளடக்கி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்று 3 ஆம் திகதியில் இருந்து போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்கள்.

இதற்கு எங்களது கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளது. பல்வேறு சிவில் அமைப்புக்களும், சமய அமைப்புக்களும் ஆதரவு வழங்கியுள்ளன.

அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கிறது.

இப்படியான சம்பவங்கள் நடைபெறுகின்ற போது மக்களுக்கு தலைமைத்துவம் கொடுக்க வேண்டும். எனவே அனைவரும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக கேட்டு நிற்கின்றோம். 

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026