நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படவுள்ள போராட்டம்- பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ள சுமந்திரன்!
இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனாலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் பெரவரி மாதம் 3 ஆம் திகதி பொத்துவிலில் இருந்து மாபெரும் பேரணி ஒன்றை ஆரம்பித்து ஐந்து நாட்கள் நீண்டதொரு பயணமாக மேற்கொண்டு பொலிகண்டியை வந்தடைந்தோம்.
அதன் போது அந்த போராட்டம் எதற்காக ஆரம்பித்தோம் என்பதை விக்கும் வகையில் பத்து அம்சக் கோரிக்கையை சிவில் சமூக அமைப்பினர் முன்வைத்திருந்தனர். அதில் ஒன்று பயங்கரவாத தடுப்புச் சட்டம் நீ்க்கப்பட வேண்டும் என்பதையும் முன்பதையும் முன்வைத்திருந்தனர்.
அவ்வாறு கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டே இந்த வருடம் 3 ஆம் திகதி முல்லைத்தீவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை முற்றாக நீக்கக்கோரி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்துகொள்ள கீழுள்ள காணொளியைத் தொடருங்கள்..
