புத்தாண்டில் யாழில் மாணவனுக்கு ஏற்பட்ட துயரம்!!
jaffna
missing
student
kasurina sea
By Vanan
யாழ். காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளார்.
இன்று மாலை 3.30 மணியளவில் மாணவன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள் கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்களினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோண்டாவிலைச் சேர்ந்த லோகீஸ்வரன் (வயது-17) என்ற மாணவனே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். கோண்டாவில் இருந்து 20 பேர் காரைநகர் கசூரினா உல்லாசக் கடற்கரைக்குச் சென்றுள்ளனர்.
அவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
எனினும் ஒருவர் மீண்டு வந்த நிலையில் மற்றையவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்