யாழ்ப்பாண கடற்கரையில் இறந்த நிலையில் பாரிய திமிங்கலம்!
jaffna
kyts
suruvil
By Kalaimathy
ஊர்காவற்துறை - சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 32 அடி நீளமான கரையொதுங்கிய குறித்த திமிங்கிலத்தை காலை 8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர்.
தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.
குறிப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் திமிங்கிலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கடற்றொழில் திணைக்களம் உத்தியோகர்கள், பொது சுகாதார பரிசோதகர், காவல்துறையினர் வருகை தந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்