யாழில் மாணவிகளிடம் ஆசிரியரின் தவறான சீண்டல்: அதிரடியாக பறந்த முறைப்பாடு
யாழில் (Jaffna) பாடசாலை மாணவிகளிடம் தவாறான முறையில் நடந்துகொண்டதாக ஆசிரியர் ஒருவர் மீது முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ். நகரப் பகுதி ஒன்றில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தவறான முறை
இந்த பாடசாலையில், தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவிகளுடன் அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக தவறான முறையில் நடந்து வந்துள்ளார்.
இதையடுத்து, குறிப்பிட்ட விடயம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திற்கு சில மாணவிகளின் பெற்றோர் தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இருப்பினும், பாடசாலை நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மாணவிகளுக்கு நடந்த அநீதி தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதன் பிரகாரம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
