யாழ்.தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2024 கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரல்(படங்கள்)
யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில் 2024 ஆம் ஆண்டிற்கான NVQ சான்றிதழ் தர (மட்டம் 3,4) மற்றும் NVQ டிப்ளோமா தர (மட்டம் 5,6) கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தரம் 10 தகமை உடையோர் முதல் க.பொ.த (உ/த) (A/L) உயர்தர தகமை உடையோர் வரை கற்கக் கூடிய கட்டிட நிர்மாணத்துறை, தன்னியக்க இயந்திரவியல், மின் மற்றும் இலத்திரனியல், வர்த்தகம் மற்றும் மொழித்துறை, கணணிசார், தொலைத்தொடர்பு தொழில்நுட்பவியல் போன்ற துறைகள் சார்ந்த 43 கற்கை நெறிகளுக்கும் மேலதிகமாக மாணவர்களை அனுமதிக்கக்கூடியதாக உள்ளது.
மேற்படி கற்கை நெறியை பயில விரும்பும் தகுதியுடையோர் பணிப்பாளர் தொழில்நுட்பவியல் கல்லூரி யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விபரம்
மேலதிக விபரங்களை dtet.gov.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்பக்கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிலையத்துடன் நேரடியாகவோ அல்லது 0212220028, 0212222358 எனும் தொலைபேசி இலக்கங்களினூடாக பெற்றுக்கொள்ளலாம் மேலும், இங்கு முழு நேரகற்கை நெறிகள் முற்றிலும் இலவசமானவை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |