யாழில் பொலிஸாரால் விரட்டியடிக்கப்பட்ட வியாபாரி!
police
jaffna
thirunelveli
kopay
By Kalaimathy
நாடுபூராகவும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், யாழில் வீதியோராத்தில் வைத்து வியாபாரம் மேற்கொண்ட வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவருகையில்,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பயணத்தடையினை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் இன்றைய தினம் கோப்பாய் பொலிஸாரினால் விரட்டப்பட்டனர்.
மரக்கறி வியாபாரிகள் ஒன்றுகூடி விற்பனையில் ஈடுபடுவதனால் அவ்விடத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நிலைமை காணப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியுள்ளனர்.
