யாழில் 35 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட சேவை
கொழும்பிலிருந்து (Colombo) - காங்கேசன்துறை (Kankesanturai) வரையிலான தொடருந்து பொதிகள் சேவைகள் 35 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று (08.06.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி (Kumara Jayakodi) ஆகியோர் யாழிற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த சேவையை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
தொடருந்து நிலையம்
அதேவேளை, தொடருந்து நிலையத்தில் நூலகம் ஒன்றினையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து தொடருந்து நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
இந்நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோரும், தேசிய மக்கள் சக்தியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 



 
                                        
                                                                                                                         
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        