யாழில் மருத்துவர் உட்பட மூவரின் உயிரை பறித்தது கொரோனா
corona
jaffna
death
doctor
By Sumithiran
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உட்பட மேலும் மூவர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பாணம் கிளையில் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்களில் ஒருவரான நல்லூரைச் சேர்ந்த 72 வயதுடையவரே கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாயைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.
இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 227ஆக உயர்வடைந்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி