உடுத்துறை மாவீரர் நினைவாலயத்தில் ஆறாம் நாள் நினைவஞ்சலி
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வாரத்தின் ஆறாம் நாள் நினைவஞ்சலி இடம்பெற்றது.
இன்றைய மாவீரர் வார ஆறாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பச்சிளைப்பள்ளி
கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பளை பகுதியில் இன்றைய தினம் (26) காலை 9:30 மணியளவில் பளை பிரதான பேரூந்து தரிப்பிடத்தின் அருகாமையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு மிக சிறப்பாக இடம்பெற்றது.

இவ் கௌரவிப்பு நிகழ்வில் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மங்கள வார்த்தை இசையுடன் அழைத்து வரவேற்கப்பட்டு மாவீரர் பெற்றோரால் நினைவு சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் கௌரவிப்பு நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களும் மற்றும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன் அவர்களும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவீரர் பெற்றோர் மாவீரர் உரித்துடையோர் என பலரும் கலந்து கொண்டனர்


புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் ஏற்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் இன்று மாவீர் வாரத்தின் நான்காம் நாள் நினைவஞ்சலி இடம்பெற்றது
இன்றைய மாவீரர் வார மூன்றாவது நாள் நினைவஞ்சலி நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறுவினர்கள் என பலரும் கலந்துகொண்டு சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






