மட்டு. அம்பிளாந்துறையில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறை கிராமத்தில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இன்றைய தினம் (24.11.2028) நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பிளாந்துறை கிராமத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது, மாவீரர்களின் பெற்றோர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மங்கள விளக்கு ஏற்றப்பட்டது.
மலர் அஞ்சலி செலுத்தினர்
இதனைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த மாவீரர்களாகிய தமது பிள்ளைகளின் புகைப்படத்திற்கு சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தி, அகவணக்கம் செலுத்தினர்.

மேலும் இந்த நிகழ்வின் போது மாவீரர்களைப் பற்றிய கருத்துக்கள், பேச்சுக்கள், கவிதை, பாடல்களும் இடம்பெற்றன.
பின்னர் மாவீரர்களின் பெற்றோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மூதூர் - வீரமாநகர், சந்தோசபுரம் கிராமங்களைச் சேர்ந்த 60 மாவீரர் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கலும், நினைவஞ்சலி நிகழ்வும் இன்று (24) மூதூரில் இடம்பெற்றது.
இதன்போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் குமார் ஜெயக்குமரனினால் இவ் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் முதூர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.பிரகலாதன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |