யாழ் பல்கலை பட்டமளிப்பை முன்னிட்டு ஒருவழிப் பாதையாக மாற்றப்படும் இரு வீதிகள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப்பட்டமளிப்பை முன்னிட்டு வீதிப் போக்குவரத்தை ஒருவழிப் பாதையாக மாற்றுவது தொடர்பாக நல்லூர் பிரதேச சபை அறிவித்துள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் யுகராஜா ஜெலீபன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு வீதிகள்

அந்த செய்திக்குறிப்பில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 37 வது பட்ட மளிப்பு விழா நடைபெறும் 19.07.2023 தொடக்கம் 21.07.2023 வரையான 3 தினங்களில் போக்குவரத்து தொடர்பான அசௌகரியங்களை தவிர்க்கும் பொருட்டு காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை திருநெல்வேலி சந்தியிலிருந்து கொக்குவில் சந்தியை நோக்கிய ஆடியபாதம் வீதியின் புகையிரதக் கடவை வரையான பாதை மற்றும் கலட்டிச் சந்தியிலிருந்து இராமநாதன் வீதி பரமேஸ்வராச் சந்தி வரையான பாதை ஆகியன ஒருவழிப்பாதையாகப் பேணப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.